கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரில் 90 சதவிகிதத்தினர் இவர்கள்தான்!

கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரில் 90 சதவிகிதத்தினர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்தான் என தேசிய பொது சுகாதாரத்துறையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது, தடுப்பூசி பெறாதவர்களை ஒப்பிடும்போது 69 சதவிகிதம் குறைவு என்றும், உயிரிழப்பது 49 சதவிகிம் குறைவு என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

யார்க் பகுதியிலுள்ள Mackenzie மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் Dr. Steve Flindall, கொரோனா தொற்றுடன் மருத்துவமனைக்கு வருவோரில் பெரும்பாலானோர் இன்னமும் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள்தான் என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக கூறுகிறார்.

கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 84.9 சதவிகிதம்பேரும், கொரோனாவல் உயிரிழப்போரில் 82.3 சதவிகிதம்பேரும் தடுப்பூசி பெறாதவர்கள் என்கிறது தொற்றுநோயியல் துறை அறிக்கை ஒன்று.