யாழ். புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு எழுத்துமூல கோிக்கை..!

யாழ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் வடமாகாண திட்டமிடல் மற்றும் உள்ளராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் எழுத்துமூலம் கோரியுள்ளார்.

யாழ்.நகரில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் இ.போ.ச பேருந்துகள் குறித்த தரிப்பித்தில் இருந்து சேவையில் ஈடுபட்ட மறுந்துவந்தன.

இ.போ.ச யாழ் ஊழியர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பின்போது குறித்த புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பஸ் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில்

Advertisement

தாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் 03.11.2021 வடமாகாண அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிராகாரம் வடமாகாண ஆளுநரின் தீர்மானத்துக்கு அமைய வெளிமாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளை புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவையில் ஈடுபடுமாறு எழுத்து மூலமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.