சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்வு.!

சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோங்கிங் நகரில் உள்ள உணவகத்தில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திடீர் வெடி விபத்தில் உணவகம் மற்றும் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாக சொல்லப்படுகிறது. தீ விபத்தில் சிக்கிய 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய 26 பேர் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.