யாழில் இடம்பெற்ற கோரவிபத்து : மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தீயை அணைத்து காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Previous articleசர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய தமிழ் மாணவன்
Next articleஇன்றைய ராசிபலன் 20/05/2022