யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காண 10 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

குளவி கொட்டியதில் 10 பாடசாலைமாணவர்கள் மற்றும் 02 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றைய தினம் (10) யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 02 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நின்றிருந்த போது குளவி கூடு கலைந்ததில் குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் வீட்டின் அருகில் தங்கம் இருப்பதாக தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது
Next articleபெற்றோல், டீசல் தேடுபவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் !