வருகின்ற இரண்டு வாரங்கள் பாடசாலைகள் மூடப்படலாம் : வெளியான அறிவிப்பு!

நாட்டில் பொருளாதார தட்டுப்பாடு மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை செய்திஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளுக்கு இன்று இரண்டு வாரங்கள் விடுமுறை அளித்து ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதுடன், இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எரிபொருள் நெருக்கடியை அடுத்து நாட்டில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் நேற்று அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.

அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாட்டிற்கு வர உள்ளதாகவும், இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.