யாழில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவன்!

யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்! : ஊடகவியலாளர் சங்கம் எழுப்பிய கேள்வி!
Next articleவிபத்தில் கவிழ்ந்த எரிபொருள் வாகனம் : வாளியில் வந்து எரிபொருளை அள்ளிய பொதுமக்கள்!