யாழில் இருந்து சென்னைக்கு அடுத்தவாரம் முதல் விமான சேவை ஆரம்பம்!

அடுத்தவாரம் முதல் யாழில் இருந்து இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இந்த சேவையானது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படும்.

கடந்த சில நாட்களாக யாழில் விமான சேவைகள் தடைப்பட்ட நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச்செயற்பாடு யாழ் சர்வதேச நிலையத்தை செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅமைச்சர் பதவிகள், சலுகைகள் வேண்டாம் என்கிறார் சஜித்!
Next articleவெளிநாட்டில் உயிரிழந்த யாழினை சேரந்த பெண் : வெளியான காரணம்!