சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற நால்வர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை கடத்த முயன்ற நால்வரை வண்ணத்துவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அனுமதியின்றி 3 லாரிகளில் சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வண்ணாத்திவில்லு நகரில் லாரிகளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதேநேரம் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதாகவும் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் வண்ணாத்திவில்லு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று பாரவூர்திகளையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது !
Next articleமன்னார் பொதுமக்களுக்கு காணி தெடர்பில் காதர் மஸ்தான் விடுத்த முக்கிய அறிவிப்பு!