யாழ்.வேலணையில் நண்பரின் ATM அட்டையை திருடி 30 ஆயிரத்திற்கு மதுபானம் வாங்கியவருக்கு பிணை!

நண்பரின் ஏடிஎம் கார்டை திருடி மதுபானம் வாங்கிய நபர் ரூ.50,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது நண்பரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை வாங்கியுள்ளார்.

ஏ.டி.எம் அட்டையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை 50,000 ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.

Previous articleஉணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த 12 இலங்கை தமிழர்கள்!
Next articleதலைவர் பிரபாகரனின் வீட்டு வளாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வல்வெட்டித்துறை நகரசபை! நான் துப்புரவு செய்வேன் சிவாஜி சீற்றம்.. !