யாழ்.மாவட்டத்தில் போதை அடிமைகளால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுமி!

யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இது சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றில் சிறுமி ஒருவர் போதைப்பொருள் என தெரியாமல் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி எப்படி போதைப்பொருளுக்கு அடிமையானாள் என விசாரணை நடத்திய போது, ​​போதைப்பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்திய சில பொருட்களை சிறுமி தவறாக கையாண்டு வாயில் போட்டுள்ளார்.

இதனால், போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தும் பொருட்களை சிறுமி பயன்படுத்தியுள்ளார்.

Previous articleயாழில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் கைது!
Next articleஉயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த இளைஞரொருவரின் நெகிழ்ச்சியான செயல் !