யாழில் மாயமான 17 வயதான சிறுமி : வெளியான புகைப்படம்!

யாழ்ப்பாணத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியை சேர்ந்த மதிவதணன் லக்சாயினி என்ற 17 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

குறித்த சிறுமி கடந்த புதன்கிழமை (21-09-2022) நாடகம் மற்றும் மேடைப் பரீட்சைக்காக பாடசாலைக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாடசாலை மாணவர்கள் கைது !
Next articleபொலிஸ் அதிகாரியை வீதியில் வைத்து கொடூரமாக தாக்கிய இருவர்!