யாழ்.காரைநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் இவர்களே! பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு.. !

காரைநகரில் அண்மைக்காலமாக அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் காரைநகருக்கு வியாபார நிமித்தம் வருவதே காரணம் என காரைநகர் பிரதேச சபையின் உப தலைவர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் காரைநகர் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் வெளியில் செல்லும் வாகனங்கள் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருகின்றன.

காரைநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்களின் மூலம் காரைநகர் பகுதிக்குள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வருபவர்களே மேற்கொள்வதாக அறியமுடிகிறது.

அதாவது பழைய இரும்பு மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வருபவர்களால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறலாம் எனவே இதனை தடுக்க காரைநகர் பகுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வருபவர்கள்.

காரைநகர் பிரதேச சபையில் உரிய அனுமதி பெற்று உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நடைமுறை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.