யாழில் கணவனும், மனைவியும் வீட்டை பூட்டி விட்டு, வேலைக்குச் சென்றிருந்த வேளை புகைக்கூட்டால் புகுந்து கொள்ளை!

நேற்று மதியம் மண்டு மேற்கு பனங்காட்டு பகுதியில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்த சுமார் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

வீட்டின் புகைபோக்கி வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகளை திருடி, வீட்டின் கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleபிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Next articleவவுனியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள் !