யாழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!

பாடசாலை மாணவியின் பெற்றோரால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“இன்று யாழ்ப்பாணம் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பெற்றோரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதற்கமைய பாடசாலையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுடன்.

இந்நிலையில் மாணவர்கள் ஆசியர்களாக நடந்து கொள்ளாவிட்டால் பாடசாலையில் பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதை பெற்றோர்கள் பேசி தீர்க்கலாம்.

எனவே ஆசிரியர் மீதான தாக்குதலை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலயக் கல்விப் பணிமனை ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleமாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவு மண்டபம் நல்லுாரில் அங்குரார்ப்பணம்..!
Next articleயாழில் ஆசிரியர் தாக்கப்பட விவகாரம்; வடமாகாண ஆளுநரின் அதிரடி பணிப்புரை!