யாழினை சேர்ந்த தாயும், மகனும், மகளும் பலி ! கனடாவில் இடம்பெற்ற விபத்தில் நடந்த சோகம் !

கடந்த ஒக்டோபர் மாதம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தின் தாயார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் இந்த விபத்தில் மகனும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்டோபர் 12 அன்று, மூன்று பயணிகளை ஏற்றிச் சென்ற அகுரா வாகனம் மீது டிரக் மோதியதில் 21 வயது ஆணும் 23 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடன் பயணித்த அவர்களது தாயார் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, விபத்து தொடர்பில் வௌன் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான பாரவூர்தி சாரதிக்கு எதிராக ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டில் எரிபொருள் விலைகளில் திடீர் மாற்றம் ? குறித்து வெளியான அறிவிப்பு !
Next articleபெண் பொலிஸாரை சீரழித்த ராணுவ சிப்பாய் கைது!