யாழில் நடு ரோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கைது !

யாழ் தெல்லிப்பளை- கோப்பாய்க்கு இடையே வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில், நடு றோட்டில் வைத்து கேக் வெட்டி பார்டி நடத்தியுள்ளார்கள் சில காவாலிகள். இவர்கள் அந்த வீதியை முற்றாக மறித்து கழியாட்டத்தை நடத்தி வந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரி ஒருவர் அந்த வழியால் செல்ல முற்பட்டவே அவரைச் செல்லவிடவில்லை. இதனை அடுத்து அவர் கொடுத்த முறைப்பாட்டில் அங்கே வந்த பொலிசார், இதனைக் கண்டு திகைத்து விட்டார்கள் இரண்டு தட்டுத் தட்டி 10 பேரை கைது செய்தார்கள் யாழ் பொலிசார்.

இவர்களை 15ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்திருக்குமாறு யாழ் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாவலர் பாடசாலை முன்பாக மோட்டார் சைக்கிளில் நின்ற இந்த இளைஞர்கள் குழுவினர் வீதியை மறித்து பிறந்தநாள் தினத்தினை கொண்டாடியது பலரது போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்துள்ளது. எங்கே எல்லாம் வைத்து பார்டி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். எல்லாம் சினிமா படங்கள் செய்யும் வேலை. அதில் வரும் காட்சிகளை வைத்து சினிமா பாணியில் பிறந்த நாளை கொண்டாட நினைத்துள்ளார்கள் இவர்கள்.

Previous articleஇலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய உயிரினம்!
Next articleசிவபெருமான் யாருடைய ஆள்? யாழில் தூண்டித்துருவிய படையினர்!