மூன்றாவது முறையாகவும் கிண்ணம் வென்றது Jaffna Kings

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை Jaffna Kings அணி வென்றுள்ளது.

LPL தொடரின் இறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையே ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கமைய, தொடர்ந்து 3 முறை எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக Jaffna Kings அணி சாதனை படைத்துள்ளது.

Colombo Stars அணியுடனான நேற்றைய இறுதிப் போட்டியில் Jaffna Kings அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கு முன் LPL போட்டிகளில் ஏற்கனவே 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் Jaffna Kings அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் ஆடு மேய்க்க சென்ற இளைஞர்: தந்தைக்கு காத்திருத்த அதிர்ச்சி
Next articleவியட்நாமில் உள்ள இலங்கையர்கள்  தொடர்பில் வெளியான தகவல்