யாழ் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் மேற்கொள்ளப்பட்டது
உரிமையாளர்கள் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவினை மேற்கொள்ள முடியும்
காணி கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குகின்றன.

காணி உரிமையாளர்களுக்கு முற்கூட்டியே கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அத்துடன் பிரதேச செயலகத்தில் வரைபடமும் உள்ள நிலையில் வரைபடம் மூலம் தமது காணியினை இனம் கண்டு கொள்ள இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.