புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் மாணவன்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் பொஸ்கோ பாடசாலையில் 216 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் இவர்களில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டி சித்தியடைந்துள்ளனர்

அதேவேளை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் 217 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 124 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்துள்ளனர்

இவர்களில் யாழ். இந்து ஆரம்பப பாடசாலை மாணவி கிரிதரன் அர்மிதா என்ற மாணவி 186 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

அதேவேளை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இம்முறை 188 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 91 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனா உருத்திரகுமார் மதுசணன் 186 புள்ளிகள் பெற்றுள்ளார்.

Previous articleயாழ் பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Next articleஇன்றைய ராசிபலன்27.01.2023