தென்னிலங்கையில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு மனைவியை கட்டிப்பிடித்த நபர்!

மிரிஹான பொலிஸ் தலைமையகத்தினுள் உடலுக்கு தீ வைத்துக் கொண்டு தனது மனைவியை கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்ற நபரொருவரை நேற்று மாலை பொலிஸ் உத்தியோகத்தர்களை பெரும் முயற்சி செய்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பலத்த காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது மனைவி முறைப்பாடளித்திருந்தார். இதனால் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே, மேற்படி விபரீதம் நடந்தது.

மிரிஹான தலைமையகப் பொலிஸாரின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில், சந்தேகநபர், தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டு, அருகில் இருந்த தனது மனைவியைக் கட்டிப்பிடிக்க முற்பட்டார்.

அவரது மனைவி பிரதான வாயிலுக்கு வெளியே ஓடிவந்து உயிரைக் காப்பாற்றினார்.

அதேநேரம், அங்கிருந்த போலீசார், அந்த பெண்ணை துரத்திச் சென்ற நபரை பிடித்து, குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

அப்போது அவர் அணிந்திருந்த கால்சட்டை மற்றும் டி-சர்ட்டில் இருந்து பெற்றோல் எரிபொருளின் துர்நாற்றம் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleவறுமையில் பிள்ளைகளில் பசியை போக்க தான் உயிரை தியாகம் செய்த தாய் ! இலங்கையில் நடந்த சோகம் !
Next articleவவுனியாவில் அதிரடியாக கைது செய்ப்பட்ட நபர் ! வெளியான காரணம் !