யாழில் நடந்த வடமாகாண அழகுராணி போட்டி !

தேசிய அழகுகலை மன்றமும், சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து எற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி தேர்வு நிகழ்வு இன்று யூஎஸ் தனியார் விடுதியில் நடைபெற்றது..

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையின் தேசிய அழகுகலையின் நிபுணரும் பணிப்பாளரும் ஆகிய எஸ்.டி.சதுனி சேனநாயக்க கலந்து கொண்டு அழகுராணிப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இவ் அழகுராணிப் போட்டியானது யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக இடம்பெறுகின்ற போட்டியாக காணப்படுவதுடன் 25 மகளிர்களுக்கான தேர்வுப்போட்டி இடம்பெறும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டபோதிலும்13 மகளிர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதன் இரண்டாவது சுற்றுக்கான தேர்வு வருகின்ற 25ஆம் திகதி அன்று நடாத்துவதற்கு அழகுராணிக்கான நடுவர்கள் குழாம் முன்னிலை தீர்மானிக்கப்பட்டது.

இதில் 20வயது தொடக்கம் 22 வயது நிரம்பிய மகளிர் பங்குபற்றினர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அழகிகள் பெரும்பாலானவர்கள் இந்திய பாணியில் செயற்கையாக பேசி பார்வையாளர்களை எரிச்சலூட்டினர்.

இவ் நிகழ்வில் இலங்கை தேசிய அழகுகலை நிறுவனத்தின் தவிசாளர் மாதாவ வத்தேகேமே, மற்றும் நிகழ்ச்சி எற்பாட்டாளர் அர்ஜூன் ஸ்ரீரஞ்சன், மற்றும் யாழ் பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் குடும்ப உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.