யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் !

யாழில் மகன் அனுப்பிய பணத்தை பெண்ணிடம் கொடுத்த முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது.

யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வெளிநாட்டில் உள்ள அவரது மகன் யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு ஒன்றைக் காட்டுமாறு சுமார் ஒரு கோடி ரூபாவை தவணை முறையில் பணம் கொடுத்து தமக்கு வழங்குமாறு கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெண் ஒருவர் தனது தேவைக்காக முதியவர் ஒருவரிடம் பணம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையின் அடிப்படையில் முதியவர் மகனுக்குத் தெரியாமல் பணத்தைக் கொடுத்த நிலையில், பணத்தைப் பெற்ற பெண் பணத்தைத் திருப்பித் தராததால் முதியவர் ஏமாற்றமடைந்துள்ளார்.

இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர், காணியை வாங்கி தருமாறு மகன் வற்புறுத்திய நிலையில், தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகாரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியர்!
Next articleயாழில் பயங்கரம்: 15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி கூட்டு வன்புணர்வு!