கனடாவில் போலியான முறையில் உணவுகளை ஆடர் செய்யும் கும்பல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கனடாவில் போலியான முறையில் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவு உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய உள்ளதாக கூறி, ஹோட்டல்களை ஏமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவில் உணவு விடுதி ஒன்றிற்கு இவ்வாறான போலி ஆர்டர் கிடைக்கப் பெற்றுள்ளது.

கோவிட் சுகாதார தன்னார்வ தொண்டர்கள் 150 பேருக்கு உணவு விநியோகம் செய்யுமாறு மின்னஞ்சல் மூலம் இனந்தெரியாத நபர்கள் கோரியுள்ளனர்.

இவ்வாறான மின்னஞ்சல்களில் போலியான முகவரிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழியில் போலியாக செய்யப்படும் இவ்வாறான ஆர்டர்கள் தொடர்பில் போதியளவு விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.