உணவகங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்காத உணவகங்கள் இருந்தால் அந்த உணவகங்களை புறக்கணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் உரிமைகள் ஒழிப்பு தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த அதிகாரசபையை மூடுவதே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

முட்டையை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானியை வெளியிட்ட வர்த்தக அமைச்சர் விலையை கட்டுப்படுத்த தேவையான வர்த்தமானி ஏன் வெளியிடப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகவும் இறைச்சியின் விலைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் புத்தகம் முதல் கம்பி வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்கள் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அசேல சம்பத் குற்றம் சுமத்தினார்.

அதற்கமைய வியாபாரிகள் அரசியல் செய்ய விரும்பினால் கடையை விட்டு வெளியே வந்து அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.