கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleடுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர்கள் கைது!
Next articleசுற்றுலா விசாவில் மலேசியா சென்ற பெண் உயிரிழப்பு!