சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற பெண் உயிரிழப்பு!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொபேகன் பகுதியில் வசித்து வந்த மகலந்தானையைச் சேர்ந்த திருமணமான மற்றும் ஒரு பிள்ளையின் தாயான டொன் ரேணுகா நிலாந்தி பண்டார என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாஎல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுள்ளார்.