அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (26-05-2023) முதல் ஜூன் மாதம் 12-06-2023 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளமை காரணமாக இவ்வாறு நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29-05-2023ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08-06-2023 ஆம் திகதி வரை இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திடீர் மரணம்
Next articleயாழ் பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்த கொத்துரொட்டி வித்தமைக்கு  45,000 ரூபாய் தண்டம் அறவீடு!