சீனாவில் ஓட்டுனர் இல்லாத கார் அறிமுகம்

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

Previous articleபட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!
Next articleசாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!