பட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.

கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.

இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது.

பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர். 

Previous articleயாழ் கொடிகாமம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமி
Next articleசீனாவில் ஓட்டுனர் இல்லாத கார் அறிமுகம்