தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

  உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரம்

அதன்படி இன்றைய நிலவரத்தின் பிரகாரம் 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ருவாகும். 24 கரட் தங்கம் ரூ. 163,000 முதல் ரூ. 164,000 ஆக உள்ளது.

அதேவேளை உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Previous article843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
Next articleபோதைப் பொருளுடன் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கைது!