போதைப் பொருளுடன் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கைது!

  போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம் கேரள கஞ்சா மற்றும் 900 மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர் ஹேனமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதான பெண் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous articleதங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Next article96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!