96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!

 கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை 51 நிமிடங்கள் மற்றும் 9 செக்கன்களில் நடந்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

தம்மை நினைத்து தாமே பெருமிதம் கொள்வதாக ராஜீனா தெரிவிக்கின்றார்.

95 வயது முதல் 99 வயது வரையிலான பிரிவில் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை மிக வேகமாக நடந்து கடந்த உலக சாதனையை ராஜீனா நிலைநாட்டியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி லின்ட்பர்க் என்ற பெண் நிலைநாட்டியிருந்த சாதனையை ராஜீனா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

Previous articleபோதைப் பொருளுடன் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கைது!
Next articleஇலங்கைக்கு கடன் உதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி