யாழ் சுண்டுக்குளியில் உள்ள தனியார் விடுதியில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (29) மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன .

கொழும்பு பெண்கள் கைது

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன் போது , உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.