யாழில் மோசடியில் ஈடுபட்ட வியாபாரிகள்

அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை இன்றைய தினம் (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய ஐந்து வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எதிர்வரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ள படுவுள்ளது.  

Previous articleஇன்றைய ராசிபலன்30.05.2023
Next articleநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாகனம்