யாழில் வீதியை கடக்க முற்ப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த சடையன் பாலச்சந்திரன் (வயது – 48) என்பவரே இதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்திலிருந்து தெல்லிப்பழையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தவர் துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவரை சந்திப்பதற்காக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

வீதியின் மத்திய கோட்டுப் பகுதியில் வைத்து தெல்லிப்பழையிலிருந்து யாழ். நகர் நோக்கி வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் அவர் மருத்துவமனையிலேயே நேற்றுமுன் தினம் மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous articleகனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்ட அதிகரிப்பு!