மட்டக்களப்பில் இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

அதன்படி வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை பொதுமக்கள் நாட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட வர்த்தகர்
Next articleசிவிலியன் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா