வீட்டில் தனிமையில் வசித்து வந்த தாயும் மகளும் வெட்டிக் கொலை!

இரத்தினபுரி, காவத்தையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் 28 வயதுடைய இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleநாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next article கனடாவில் 12 வருடங்களிற்கு முன்னர் காணமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்பு!