கனடாவில் 12 வருடங்களிற்கு முன்னர் காணமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

 கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.

20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாக பார்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணம் தொடர்பில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.