அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.06 சதம் முதல் ரூ. 286.12 சதம் ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 303.55 சதத்தில் இருந்து 301.50 சதமாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 288.78 சதம் முதல் ரூ. 285.81 சதம் மற்றும் ரூ. 301 முதல் ரூ. 298 ஆக குறைந்துள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 291 முதல் ரூ. 289 ரூபாவாக உள்ளது. விற்பனை விகிதம் 303 முதல் ரூ. 301 ஆக குறைந்துள்ளது.