கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில் செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும் வெளிவராத நிலையில் இன்று சடலம் கல்லடி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதான செ.சாரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.