எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயம்

நாட்டில் நேற்று (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.