பலாப்பழம் என்ற போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த மூவர் கைது!

 மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

பிரதான வீதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் இருவர் மற்றும் புதியகாத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் வைத்து மற்றொருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூவரிடமுமிருந்து சுமார் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செயப்பட்டுள்ள நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தீதில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.