வங்கிகளில் நிலையான வாய்ப்புகளுக்கான வட்டி வீதங்கள் குறைப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் உள்ள வங்கிகள் நிலையான வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 15-16 சதவீத வட்டியை தற்போது வழங்குகின்றன.