இலங்கையின் ஓட்டுனர் உரிமங்களை இத்தாலியில் பயன்படுத்துவது குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையின் ஓட்டுநர் உரிமங்கள் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்த சமீபத்திய செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையின் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய பிரதேசத்தில் அங்கீகரிப்பது தொடர்பில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முரண்பாடானவை என தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு உடன்படிக்கையை புதுப்பித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளதாக ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் இத்தாலியில் உள்ள இலங்கை சமூகத்திற்கு முறையாக அறிவிக்கப்படும் என்று தூதரகம் மேலும் கூறியுள்ளது.