யாழ் அச்சுவேலி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் விசமிகளால் தீக்கிரை!

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் இது விசமிகளின் செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பொலிஸில் முறைப்பாடு

யாழ்.மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் தீப்பரவலால் வர்த்தக நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

வர்த்தக நிலையத்துக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாமென வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleஇலங்கையில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை உயிரிழப்பு!
Next articleஅச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதால் நபர் ஒருவர் உயிரிழப்பு!