தங்கம் வாங்க இருப்போருக்கான மகிழ்வான செய்தி!

சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம் 4- ஆம் திகதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இன்றைய தங்கவிலை நிலவரம்
அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வருகிறது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,580-க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,448-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 0.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,800 ஆகவும் உள்ளது.

Previous articleஅச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதால் நபர் ஒருவர் உயிரிழப்பு!
Next articleஇடிந்து விழும் அபாயத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள்