குறைவடையும் விலைகள்

ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தால் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் எதிர்கொண்ட நிலைமை எமக்கே தெரியும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைகிறது. மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கிறது.

மதப் போராட்டத்திற்கு தயாராகும் குழுக்கள்

இதை பொறுத்துக்கொண்ட மக்களை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் பெரும் தியாகங்களை செய்கிறார்கள்.

ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தால் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர முடியும். ஆனால் சமூகப் போராட்டம் தோல்வியடைந்ததால், அதன் பின்னணியில் நாட்டை அராஜகம் செய்யும் குழுக்கள் செயற்படுகின்றன.

இதில் உள்ளவர்கள் இப்போது மதப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களின் பேச்சைக் கேட்காமல் இதற்கு எதிராக கடுமையாகச் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.