கடனட்டை பயன்படுத்துவோருக்கான மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து கடன் அட்டைகளுக்கான வட்டி் வீதங்களும் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.