இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாப மரணம்

இன்று அதிகாலை  புத்தளம் – திருகோணமலை,ஏ-12 வீதியின் 18ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி அவர்கள் பயணித்த உந்துருளி, கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த, கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில், திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் ஹொரகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 21 மற்றும் 22 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

Previous articleயாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல்!
Next articleஇன்றைய ராசிபலன்04.06.2023